- நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இணையம். இன்றும் நம்மவரில் பலர் இணையத்தை ஒரு பொழுதுபோக்கு சாதனம் போலவும், தகவல்களை தேடுவதற்கு பயன்படுத்தும் ஒரு கருவியை போலவும் தான் பயன்படுத்தி வருகிறோம். இணையம் (இன்டர்நெட்) என்பது அதற்கெல்லாம் மட்டும் அல்ல. அது நம் வாழ்வையே மாற்ற கூடிய ஒன்று. இணையத்தை முறையே பயன்படுத்தி நம் ஓய்வு நேரங்களில் எளிதாக சம்பாதிக்கலாம்!
- உங்களுக்கென ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினி வேண்டும். இதை தவிர உங்களுக்கென எந்த ஒரு முதலீடும் தேவையில்லை.
- நீங்கள் இங்கே கூறப்பட்டுள்ள வழிகளின் மூலம் சம்பாதிக்கும் வருமானங்களை சேமிக்க உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கு (இ-பேங்க் அக்கௌன்ட்) வேண்டும். இணையவங்கி கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் கணினி மூலம் எளிதாக சில சொடுக்குகளில் உங்களுக்கென ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம். முதலில் http://www.alertpay.com/என்ற முகவரிக்கு செல்லவும். பின்பு, "Signup now" என்ற பட்டனை கிளிக் செய்யவும். முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போன்ற திரை தோன்றும்.
முதலில் உங்களது நாட்டை தேர்வு செய்யவும். பிறகு, "Personal starter" என்பதை கிளிக் செய்யவும். அதன்பிறகு "Next" என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும். இதன்பின் கீழுள்ள படத்தை போன்ற திரை தோன்றும்.அதில் கொடுக்கபட்டுள்ள கட்டங்களை நிரப்பவும். பின்பு, "Next" பட்டனை அழுத்தவும்.
இறுதியாக, ஒரு திரை கீழே உள்ள படம் போல தோன்றும். அதனை பூர்த்தி செய்யவும். நிரப்பும் பொழுது "Transaction pin" என்ற கட்டத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அது வெறும் கடவுச்சொல் (password) போன்றதே. அதில் நிரப்பும் சொல்லை நினைவில் வைத்து கொள்ளவும். அது, வேண்டும் நேரத்தில் பணத்தை எடுக்க தேவையானது. அணைத்து கட்டங்களையும் நிரப்பிய பின், சமர்பிக்கவும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ-மெயில் உடனடியாக அனுப்பப்படும். அதில் உள்ள வலை முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்கள் அக்கௌன்ட் ஆக்டிவேட் ஆகி விடும். உங்களது இணையவங்கி கணக்கு இப்போது உபயோகிக்க ஏற்றது
கவனிப்பிற்கு !
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் வழியாக கிட்டும் வருமானம் பெரும்பாலும் அமெரிக்க டாலராகவே இருக்கும். அதனை இந்திய ரூபாயாக மாற்ற இணையத்தில் பல வலைப் பக்கங்கள் உள்ளன. அவ்வளவு ஏன்? அலட்பேவில் கூட பணப்பரிமாற்றம் செய்யலாம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் போது பணமாற்றம் செய்து நல்ல வருமானம் பெறலாம்.
- இணையத்தில் பல வலைப்பக்கங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்கும் பொருட்டு உள்ளன. இருந்தாலும், மிகவும் சிறந்த பத்து வலை தளங்களை மற்றும் தேர்ந்து எடுத்துள்ளேன். இவை அனைத்தும், இணையத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்கி வருகின்றன. ஒரு வலைதளத்திற்கு, குறிப்பாக நிதி தொடர்பான வலைபக்கத்திற்கு, நம்பகதரம் அவசியம். இங்குள்ள அனைத்து வலை தளங்களும் நம்ப தகுந்தவை.
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள வலைதளங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை ஒரே கணினி அல்லது ஒரே இணைய இணைப்பை கொண்டு தொடங்க கூடாது.
எவ்வாறு சம்பாதிக்கலாம்?
முதல் வழி - சிறு வேலைகளை செய்தல்
இந்த வழி மூலம் எளிதாக சம்பாதிக்கலாம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைடில் நீங்கள் சிறு வேலைகளின் (கிளிக் செய்தல், சில வலைப்பக்கங்களில் சைனப் செய்தல் போன்றவை) பட்டியலைக் காணலாம். ஒவ்வொரு வேலையை முடித்தவுடன் அதற்குரிய பணம் தரப்படும். நாம் நம் நண்பர்களுடன் சமூக வலைப்பக்கங்களில் ச்சேட் (Chatting) செய்கிறோம். அதே வேலையை இந்த வெப்சைட்டில் நாம சம்பாதிக்க செய்யலாம். இப்பக்கத்தில் "forum" என்ற பகுதியில் பல தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நம் கருத்துக்களைக் கூற வேண்டும். அதற்கு பணம் தரப்படும். நீங்களும் புதிய தலைப்புகளைத் தொடங்கலாம்.உங்கள் தலைப்புக்கு நிறைய பதில் கிடைத்தால் உங்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும். எனவே சுவாரசியமான தலைப்புகளைத் தொடங்குங்கள். இந்த வழி முக்கியம். தவறாதீர்கள்.
இரண்டாம் வழி - விளம்பரங்களை கிளிக் செய்தல்
இது மிகவும் எளிமையான வழி. விளம்பரங்களைக் கிளிக் செய்து பணம் பெறலாம். இந்த சேவையை வழங்கும் வலைப்பக்கங்கள் பி.டி.சி (PTC) எனப்படும். இணைவதற்கு இவை இலவசமானவை. இங்கு ஏழு பழைய, நல்ல பி.டி.சிகளின் முகவரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒவ்வொன்றிலும் 5 விளம்பரங்களைக் கிளிக் செய்தால், 7X5= 35 கிளிக்கள். ஒரு கிளிக்கிற்கு 0.01$. எனவே 35 கிளிக்களுக்கு 0.35$ கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 10-11$ கிடைக்கும். நல்ல பொழுதுபோக்குடன் கூடிய வருமானம்.
மூன்றாம் வழி - படம், இசை, வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுதல்
இன்று ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அக்கவுண்ட் (account) இல்லாதவர்களைக் காண்பது எளிதல்ல.இந்த சமூக வலைப்பக்கங்கள் வழியாக நாம் நம் நண்பர்களுக்கு படங்கள், வீடியோக்கள்,பாடல்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.இதே செயலைக் கொண்டு நாம் எளிதாக ஓர் வலைதளம் வழியாகப் பணம் ஈட்டலாம். இணைவதற்கு இப்பக்கம் முற்றிலும் இலவசம். இதில் படங்கள், வீடியோக்கள், பாடல்களைப் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம். ஓரே நேரத்தில் பல பதிவேற்றம் வேண்டுமானாலும் செய்யலாம்.நீங்கள் பதிவேற்றம் செய்த படங்கள், வீடியோக்கள், பாடல்களை யாரேனும் பதிவிறக்கம் (download) செய்தால் உங்களுக்கு பணம் (ஒரு பதிவிறக்கம் 0.5$) கொடுக்கப்படும். ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் உங்களுடைய படங்கள், வீடியோக்கள், பாடல்களின் பதிவிறக்க வலைமுகவரியை அனுப்புங்கள். இதனால் எளிதாக பதிவிறக்கங்களை பெறலாம்.
நான்காம் வழி - adfly
இது மிகவும் எளிமையான ஓர் வழி.கீழுள்ள முகவரிக்கு சென்று உங்களுக்கென ஒரு அக்கௌன்ட் தொடங்கவும். பின், நீங்கள் விரும்பும் எந்த ஒரு வலை முகவரியையும் முதல் பக்கத்தில் உள்ள கட்டத்தில் டைப் செய்து, பின்னர் "intermission advert" (வலைமுகவரிக்கு உரிய பக்கத்திற்கு முன் ஒரு விளம்பரம் காண்பிக்கப்படும்) அல்லது "Top banner advert" (வலைபக்கத்தின் மேல் சிறிய விளம்பரம் காண்பிக்கப்படும்) என்பவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, "shrink" என்ற பட்டனை அழுத்தவும். பின், உங்களுக்கென ஒரு சிறிய வலைமுகவரி கிடைக்கும். அதை நீங்கள் விரும்பும் எந்த ஒரு வலைபக்கத்திலும் பேஸ்ட செய்யலாம். எவரேனும் அதை கிளிக் செய்தல் உங்களுக்கு வருமானம் கிட்டும்.



